ஆமிர்கான் நடித்த கஜினி மற்றும் சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பனியாற்றிய சாதிக் கான் இப்போது தொல்லைகாட்சி என்னும் பெயரில் புதிய திரைப்படம் ஒன்றை எடுக்கிறார்.
இந்த படத்தின் கதாநாயகனாக அஸ்வின் ககுமனு நடிக்கிறார். இவர் அஜித்தின் மங்காத்தா, சூர்யாவின் ஏழாம் அறிவு மற்றும் நடுநிசி நாய்கள், மேஹா, இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தொல்லைகாட்சியின் இயக்குனர் சாதிக் கான் ஊடகம் இணையத்திற்கு அளித்த சிறு பேட்டி:
ஊடகம் : அதென்ன பேரு ‘தொல்லைகாட்சி’? இது என்ன மாதிரியான படம்?
சாதிக்: தொலை கிராமத்தில் நடக்கும் முழுநீள காமெடி திரைப்படம். அந்த கிராமத்தில் எல்லாருமே ரொம்ப நிம்மதியா, சந்தோசமா வாழ்ந்திட்டு இருப்பாங்க. அப்போது அங்கே தொலைகாட்சிகள் வர துவங்கியப் பின் அவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வருது, எப்படியெல்லாம் நேரம் செலவாகுது, பயன்பெறுகிறது என்பதோடு எப்படி பிரச்சனைகள் துவங்கி தொலைக்காட்சி தொல்லைகாட்சி ஆவதே கதை.

ஊடகம் : தயாரிப்பாளர் ராஜா பாலா செந்தில், அவரில் கயலாலயா மூவிஸ் (Kayalaalaya Movies) பற்றி?
சாதிக்: ராஜா பாலா செந்தில் திரைத்துறைக்கு புதியவர். வெளிநாட்டில் எண்ணெய் கம்பனியில் கெமிக்கல் எஞ்சினியராக இருக்கிறார்.
சாதிக்: ராஜா பாலா செந்தில் திரைத்துறைக்கு புதியவர். வெளிநாட்டில் எண்ணெய் கம்பனியில் கெமிக்கல் எஞ்சினியராக இருக்கிறார்.
ஊடகம் : எங்கேல்லாம் ஷூட்டிங் ?
சாதிக்: போன வாரம் தான் காஞ்சிபுரத்துல போட்டோ சூட் பண்ணினோம். அப்புறம் பச்சைபசேன்னு இருக்கிற தேனியில் அறுபது நாள் ஒரே செடுல்ல முடிச்சிடலாம் திட்டமிட்டிருக்கிறோம்.
சாதிக்: போன வாரம் தான் காஞ்சிபுரத்துல போட்டோ சூட் பண்ணினோம். அப்புறம் பச்சைபசேன்னு இருக்கிற தேனியில் அறுபது நாள் ஒரே செடுல்ல முடிச்சிடலாம் திட்டமிட்டிருக்கிறோம்.
இந்த படத்தில் அஸ்வினுடன் நாயகியாக சாந்தினி ஸ்ரீதரன் நடிக்க இருக்கிறார். இவர் சசி இயக்கிய ஐந்து ஐந்து ஐந்து படத்திலும், சமீபத்தில் மலையாளத்தில் வெற்றி பெற்ற முஹ்சின் பராரி இயக்கிய கே.எல் 10 பத்து (KL.10 Pathu) நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் லொள்ளு சபா ஜீவா, மயில்சாமி, மதுமிதா, மனோபாலா நடிக்க இருக்கிறார்கள்.
இந்த படத்திற்கு இசையமைக்கும் தரன்குமார் யாரடி நீ மோகினி, போடா போடி போன்ற படங்களுக்கு இசையமைத்தவர். படத்தொகுப்பு எல். வி.கே. தாஸ் – இவர் பிரபு சாலமோனின் கும்கி, மைனா, கயல் படத்தில் பணியாற்றியவர்.
தொகுப்பு: ஜாஃபர் சாதிக்

No comments:
Post a Comment